• Jul 25 2025

பண மோசடி வழக்கில் பாகுபலி பட நடிகை... 7 மணி நேரம் விசாரணை-சிக்கியது எப்படி..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பெங்களூருவை சேந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடமும் பண மோசடி செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு தொழிலதிபரிடம் சுமார் ரூ. 200 கோடியை மிரட்டி வாங்கியதாக கடந்த 2019ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ் சந்திரசேகர்.


மேலும் இது தொடர்பாக அவருடைய மனைவி லீனா மரியா மால் உள்ளிட்ட 6 நபர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்லின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் விசாரணை நடைபெற்று வந்ததுள்ளது.



இதில் நடிகை நோரா ஃபதேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ஜாக்லின் ஃபெர்னான்டஸுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், சுகேஷ் சந்திரசேகரின் மனைவி தான், என்னை பல நிகழ்ச்சிகளில் பார்த்து பேசியுள்ளார் என்றும் நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளாராம்.


எனினும்  சுகேஷ் சந்திரசேகரிடம் தனது மேலாளர் தான் இதுவரை பேசியுள்ளார் என்றும், தான் அதிகமாக அவரிடம் பேசியதே இல்லை என்றும் நோரா ஃபதேஹி அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அத்தோடு நடிகை நோரா ஃபதேஹி பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.. மேலும், ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறும் 'மனோகரி' பாடலில் பிரபாஸுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


Advertisement

Advertisement