• Jul 26 2025

பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களுக்கு சவாலாக 'யாத்திசை' மேக்கிங் வீடியோ.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

7ஆம் நூற்றாண்டில் பாண்டிய இளவரசன் ரணதீரன் ஆட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு கதையை மையமாக கொண்டு சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்ட பலர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை'. இப்படமானது ஏப்ரல்.21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.


அந்தவகையில் இப்படமானது சோழ சாம்ராஜ்யம் இந்தக் காலத்தில் அதன் ஆட்சியை இழக்கும் சூழலில், மக்கள் காடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது, பாண்டியர்களுக்கு எதிராக எயினர் மற்றும் சோழர்களின் கிளர்ச்சி, தேவரடியார்களின் வாழ்க்கையை போர் எவ்வாறு சீர்குலைத்தது என்பவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியாகி பலரையும் பிரமிக்க வைத்தது. இந்நிலையில், ட்ரெய்லர் வெளியாகி ஆறு தினங்களில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளதாக கூறப்படுகின்றது. 


அதுமட்டுமல்லாது பான் இந்தியா திரைப்படங்களான பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக ட்ரெய்லர் பார்த்து ரசித்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தப் படத்திற்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுள்ளார்களா எனக் கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்.


Advertisement

Advertisement