• Jul 24 2025

பாகுபலி பிரபாஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு - பட ஷூட்டிங்கை தள்ளி வைத்த படக்குழுவினர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் இராஜமௌலி படைப்பில் உருவான பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் நடித்து உலகமெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். இந்த படத்தில் இருந்து அவருடைய மார்க்கெட் எகிற தொடங்கியது. தற்போது KGF என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் நிலையில்  பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகுபலி பிரபாஸ் அவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதாவது பிஸியாக நடித்து வந்த பாகுபலி பிரபாஸ் சமீப காலமாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் மருத்துவர்கள் பாகுபலி பிரபாஸை ஓய்வு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரபாஸ் விரைவில் குணமடைந்து வருவார் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து எதிர்பார்த்து வருகின்றரர்கள்.



Advertisement

Advertisement