• Jul 26 2025

மனைவிக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பால சரவணன்.. இம்புட்டு விலையா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நடிகராக வலம் வந்த பால சரவணன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘குட்டி புலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்பு  அவர் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். 'பண்ணையாரும் பத்மினியும்', 'திருடன் போலீஸ்', 'டார்லிங்', 'கொடிவீரன்', 'ஈஸ்வரன்', 'வேதாளம்', 'டான்', போன்ற படங்களில் பால சரவணன் நடித்துள்ளார்.

கடைசியாக 2023 பொங்கலுக்கு வெளியான அஜித்தின்  'துனிவு' படத்தில் பத்திரிக்கை நிருபராக ஒரு  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் மோகன சுந்தரத்துடன் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி தனது மனைவிக்கு நடிகர் பால சரவணன் விலையுயர்ந்த காரை பரிசளித்தார். இது குறித்து அவருடைய மனைவி ஹேமா தமது டிவிட்டர் பக்கத்தில், "நாம் கற்பனை செய்ததை விட வாழ்க்கை மிகவும் அழகானது. என் கணவர் எனக்காக புதிய ஹூண்டாய் கிரேட்டா காரை பரிசளித்துள்ளார்". என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது கணவர் பால சரவணன் மற்றும் குழந்தைகளுடன் புதிய காரை ஓட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Hyundai Creta காரின் விலை 13.23 லட்ச ரூபாய் முதல் 23.19 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெட்ரோல் - டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. 17-21 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரவல்லது.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement