• Jul 25 2025

நான் அடுத்தவங்க பணத்தைக் கொடுக்கல... விமர்சனங்களுக்கு பாலா கொடுத்த பதிலடி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர். வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவரின் காமெடியை அடிச்சுக்க சின்னத்திரையில் ஆளே இல்லை எனக் கூறலாம்.


இந்நிலையில் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தன்னால் முடிந்த உதவியையும் செய்தார். 

அந்தவகையில் பாலா 30 ஆயிரம் ருபாய் பணத்தினை பாவா லட்சுமணனுக்கு நிதியாக வழங்கினார். மேலும் இந்த பணத்தை அவரிடம் பாலா கொடுக்கும் போது தான் 1 லட்சம் ருபாய் கொடுக்கலாம் என்று இருந்ததாகவும், ஆனால் வங்கிக்கணக்கில் 32ஆயிரம் ருபாய் மட்டும் தான் இருந்ததால் பெட்ரோல் 2000ஆயிரம் போக 30,000 மட்டுமே தன்னால் அன்பு பரிசாக வழங்குவதாக கூறினார். இதுகுறித்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.


இதனையடுத்து "உதவி செய்துவிட்டு ஏன் அதை வெளியில் காட்டிக் கொள்கிறீர்கள்" என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதுகுறித்து பாலா கருத்துத் தெரிவிக்கையில் "இதை நான் வெளியில் சொல்ல வேண்டும் என்பதற்காக எப்படி செய்யவில்லை. அவரின் மேனேஜர் தான் நீங்கள் வீடியோ போட்டால் அதன் மூலமாக சிலர் பார்ப்பார்கள் என்று சொன்னார். ஒரு மருத்துவர் கூட அந்த வீடியோவை பார்த்துவிட்டு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக சொன்னார்கள்" என்றார்.

மேலும் "நான் கூட அவரின் சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாயை கொடுக்கலாம் சிகிச்சைக்காக தான் நினைத்தேன். ஆனால், அந்த அளவிற்கு என்னிடம் வருமானம் இல்லை. நான் யாரிடமும் வாங்கி கொடுக்கவில்லை, என்னிடம் இருந்ததை கொடுத்தேன். இன்னும் நான் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு வருவதை வைத்து தான் எல்லாம் செய்ய முடியும்" எனவும் பாலா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement