• Jul 24 2025

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடும் போது கரு கலைந்து விட்டது- டைட்டில் வின்னர் ஆன சுஜா வருணி, சிவகுமார் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்சியானது முடிவடைந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது. அதன் இறுதிச் சுற்றானது கடந்த ஞாயிற்றுக் கிழமை தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்தனர்.

மேலும் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில் அமீர்-பாவ்னி மற்றும் சுஜா-சிவகுமார் ஆகியோர் டைட்டில் வின்னராகத் தெரிவு செய்யப்பட்டனர்.இந்த  இரண்டு ஜோடியும் தான் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக நடனமாடி வந்தார்கள் எனலாம்.


இரு ஜோடியும் டைட்டில் வின்னர் ஆக தெரிவு செய்யப்பட்டது ரசிக்களை மிகவும் குஷியடையச் செய்துள்ளது என்பதும் முக்கியமாகும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த கையுடன் சுஜா வருணியும் அவரது கணவர் சிவகுமாரும் ஒரு பேட்டி அளித்துள்ளார்கள். 

அதில், பேய்-கடவுள் ரவுண்டில் நடனமாடிய சுஜா கீழே விழுந்துவிட்டார், அவர் அறியாமலேயே யூரின் போய்விட்டார்.பிறகே தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மருத்துவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


ஒரு சமயத்தில் சுஜாவிற்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது, அப்போது மருத்துவரிடம் கேட்டபோது குழந்தை மிஷ்கரேஜ் ஆனது என்றார், மிகவும் மனமுடைந்து விட்டேன் என சிவகுமார் சோகமான விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.இந்த தகவல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது எனலாம்.

Advertisement

Advertisement