• Jul 26 2025

அரவிந்த் சாமி இயக்கும் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் பகத் பாசில்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளத்திலும் பிரபலமான இயக்குனர் தான் பாசில். அவரது மகனான பகத் பாஸில் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வருகிறார்.

இவர் அறிமுகமான சில படங்கள் அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. இருந்தாலும் தனது திறமையின் மூலம் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிபெற்றார். இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் பகத் பாஸிலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இதனை தொடர்ந்து, பகத் பாசில்  தமிழில் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ரசிகர்களிடம் இருக்கிறது. 

இந்நிலையில்,  எதிர்வரும் நாட்களில் பகத் பாசில் தமிழில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். குறித்த படத்தை அரவிந்த் சாமி இயக்குகிறார் என்றும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement