• Jul 26 2025

ராதிகா பற்றிய உண்மைகளை பழனியிடம் சொன்ன பாக்கியா- ரோட்டில் வைத்து இனியாவை அசிங்கப்படுத்திய ராதிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

பாக்கியா பழனியிடம் ராதிகா பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றார். ராதிகா தான் தன்னுடைய கணவரின் இரண்டாவது மனைவி, எனக்கு ஆரம்பத்தில நல்ல தோழியா இருந்தாங்க இப்போ எதிரா நிற்கிறாங்க கண்டீன் ஆடர் முதலில் கிடைக்ககாமல் போனதற்கும் அவங்க தான் காரணம். இப்போ மறுபடியும் கிடைச்சதுக்கப்பிறகு ஒவ்வொரு டாஸ்க்காக தர ஆரம்பிச்சிட்டாங்க என்று சொல்கின்றார்.


இதனால் பழனி நம்மள முன்னேற விடக்கூடாது என்று நினைக்கிறவங்களுக்கு தான் நாம முன்னேறிக் காட்டனும் என்று அட்வைஸ்ட் பண்ணுகிறாரு. பின்னர் நானே உங்களுக்கு கேக்  எப்பிடி செய்யிறது என்று சொல்லித் தாறேன் வீட்டுக்கு போனதும் வீடியோ கோல் பண்ணுங்க என்று கேட்கிறாரு. அது மாதிரி பாக்கியா வீட்டுக்கு போனதும் கேக் செய்வதற்கு பாக்கியா ரெடியாகின்றார்.

கேக் செய்யும் முறை எப்படி என்று சொல்லிக் கொடுக்க பாக்கியா பதற்றத்தில் செய்கின்றார். பின்னர் ஒரு மாதிரியாக செய்து முடித்த கேக்கை பழியிடம் கொண்டுபோய் கொடுத்து சாப்பிட வைக்கின்றார். கேக்கை சாப்பிட்ட பழனி இன்னும் கொஞ்சம் முன்னேற இடமுண்டு என்று ஐடியா கொடுக்கின்றார்.அதனைத் தொடர்ந்து கிச்சனில் அமிர்தா வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் எழில் அமிர்தாவுடன் ரொமான்ஸ் பண்ணுகின்றார்.


பின்னர் இனியாவும் அவருடைய நண்பரும் ரியூசனை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்த ராதிகா திட்டுகின்றார். இதனால் கோபத்தில் இனியா நீங்க போங்க நாங்க வருவோம் என்று சொல்லி அனுப்புகின்றார். அத்தோடு இவங்களை யாருக்கும் பிடிக்காது இப்பிடி தான் திட்டிட்டே இருப்பாங்க, எங்க அப்பா மட்டும் இவங்களை கல்யாணம் பண்ணாட்டி நிம்மதியாக இருப்போம். எங்க அம்மா ரொம்ப நல்லவங்க டாடி இங்க இருக்கிறதால தான் நானும் இங்க இருக்கிறேன் என இவ்வாறு பேசிக் கொண்டு செல்கின்றனர் இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement