• Jul 24 2025

புது சீரியலில் கமிட்டான 'பாக்கியலட்சுமி' பிரபலங்கள்.. எந்த சீரியல் தெரியுமா.. அடடே அதுவும் வேறொரு சேனலிலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவிக்குப் போட்டியாக தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியும் பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பத் தொடங்கி விட்டது. அதற்காகவென்றே பல புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. 


அந்தவகையில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய 'சீதாராமன்' சீரியல் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் அடுத்ததாக 'அண்ணா' என்ற புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நாயகியாக நடிக்க உள்ளாராம். அத்தோடு இந்த சீரியலில் மமிர்ச்சி செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணாவாக நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.


மேலும் நான்கு தங்கைகளில் முதல் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தமிழ்ச்செல்வி கமிட்டாகி உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் மிர்ச்சி செந்தில் அப்பாவாக பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் STP ரோசரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் இந்த சீரியலானது ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சீரியலினை எதிர்பார்த்து தற்போது பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Advertisement

Advertisement