• Jul 23 2025

அமிர்தாவின் காலில் விழுந்து கதறி அழுத எழில்- அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா- பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியலுக்கே பேர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்கள் பலரைக் கவர்ந்த ஒரு ஹிட் தொடர் தான் 'பாக்கியலட்சுமி'. 

இந்த சீரியலானது எப்போதுமே விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இதில் பணக் கஷ்டத்திற்காக எழில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றார்.


மேலும் எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கப்போவதை அறிந்து கொண்ட அமிர்தா அதிர்ச்சியில் உறைந்து நிற்பதோடு அவரை கண்ட எழிலின் பாட்டி அமிர்தாவை மிகவும் மோசமாக கண்டபாட்டுக்கு திட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் அங்கிருந்து கிளம்பிய அமிர்தாவை தடுத்து நிறுத்திய எழில் "அமிர்தா உங்களைப் பார்க்க வந்தப்போ உங்களை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும் என்ற முடிவோடு தான் வந்தேன், ஆனால் இப்போ இருக்கிற சூழ்நிலையே வேற" எனக் கூறுகின்றார்.


அதுமட்டுமல்லாது கோபி வீட்டை விற்க முடிவெடுத்தமையையும், எழிலின் காலில் விழுந்து அவரின் குடும்பம் கெஞ்சியதையும் அமிர்தாவிடம் கூறுகின்றார். அத்தோடு "ஒட்டுமொத்த குடும்பமும் அழுதிட்டு இருக்கு, வர்ஷினியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் வீட்டிற்கான பணம் தர்றேன்னு வர்ஷினியின் அப்பா சொன்னாரு" எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் பாக்கியா அதிர்ச்சியில் உறைகின்றார்.


மேலும் "கல்யாணம் பண்ணுறதை தவிர எனக்கு வேற வழி தெரியல அமிர்தா, என்னை மன்னிச்சிடு" என அமிர்தாவின் காலில் விழுந்து கதறி அழுகின்றார் எழில். அதன் பின்னர் இருவரும் அந்த இடத்தை விட்டு விலகி செல்கின்றனர். இவ்வாறாக இந்த வார ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement