• Jul 26 2025

அந்நியன் பட அம்பி கெட்டப்பில் அசத்திய பாக்கியலட்சுமி சீரியல் கோபி..திடீரென வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரைகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

அதிலும் இவர் எம்ஜிஆர் முதல் அம்பி வரை போட்ட விதவிதமான கெட்டப் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன அந்நியன் படத்தில் அவர் போட்ட அம்பி கெட்டப்பை அப்படியே கோபி போட்டு இருக்கிறார். இந்த கெட்டப் சதீஷ்க்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

 அதேபோல ராமன் கெட்டப்பும் போட்டு சில நாடகங்களில் சதீஷ் நடித்திருக்கிறார்.மேலும் செஃப் போன்று இருக்கும் கெட்டப்பிலும் சதீஷ் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல இவர் தேர்தல் பிரச்சாரத்திலும் எம்ஜிஆர் கெட்டப் போட்டு பிரச்சாரம் செய்திருக்கிறார். இவருடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மற்றும் சில அமைச்சர்களும் உடன் இருக்கின்றனர்.

இவருடைய கலருக்கும் பாடி கெட்டப்பிற்கும் அச்சு அசல் எம்ஜிஆர் போலவே தெரிகிறார். மேலும் கூலி வேலை செய்யும் தொழிலாளியாகவும் சதீஷ் கெட்டப் போட்டு இருக்கிறார். இப்படி படித்து பிசினஸ் செய்யும் தொழிலதிபர் முதல் பாமர மக்கள் வரை எல்லா கெட்டப்பிலும் சதீஷ் நாடகங்களிலும் சினிமாவிலும் நடித்து அசத்துகிறார்.


Advertisement

Advertisement