• Jul 25 2025

அந்த இடத்தில் டாட்டூ குத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வானி ராணி என்ற தொலைகாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரேஷ்மா. 2015 இல் மசாலா திரைப்படத்தில் அறிமுகமானார். பின்பு விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியான கதாபாத்திரத்தின் ஊடாக பிரபல்யம் அடைந்த ரேஷ்மா பசுபிலேற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நியூட்ரல் ரேஷ்மா என்ற பெயர் எடுத்தார். 


இந்நிலையில், தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இவர்  சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இவருக்கு ஏராளமான பாலோயர்களும் உள்ளனர். 


இவ்வாறுஇருக்கையில் நடிகை ரேஷ்மா அண்மையில் ஒரு போட்டோ வெளியிட அதில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது.


அந்த புகைப்படமும் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


Advertisement

Advertisement