• Jul 24 2025

தாடி, மீசை என ஆளே மாறிப்போன பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் சதீஷ்-தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

தற்போது இந்த சீரியல்  டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா கணவர் விட்டு சென்றாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்.

அவரிடம் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ரசிக்கிறார்கள், நாமும் இதுபோல் தைரியமாக எதையும் சந்திக்க வேண்டும் என பலர் போராடுகின்றனர்.இதனையடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது, என்ன மாற்றம் என தெரியவில்லை.


இந்த நேரத்தில் தான் தொடரில் கோபி என்ற வேடத்தில் நடித்துவரும் சதீஷின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. அதில் அவர் தாடி, மீசை எல்லாம் வைத்து செம ஸ்டைலிஷ் லுக்கில் காணப்படுகிறார்.


அதைப்பார்த்த ரசிகர்கள் தெறி லுக், செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement