• Jul 26 2025

கண்ணம்மாக்கு சாக்லேட் ஊட்டி விடும் பாரதி ...அப்போ லவ் மூட் ஸ்டார்ட் ஆ?? பாரதி கண்ணம்மா 2 எபிசோட்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா முதல் சீசன் வெற்றியடைந்த நிலையில், பாரதி கண்ணம்மா 2 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றை இயக்கிய பிரவீன் பென்னட் 2வது சீசனையும் இயக்கி வருகிறார்.

சிபு சூர்யன் பாரதி கதாபாத்திரத்திலும், வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா 2 ஆம் பாகம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது கதைக்களம் விருவிருப்பு அடைந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்று பார்ப்போம்.இந்நிலையில் பாரதியும்,கண்ணம்மாவும் காரில் போய்க்கொண்டிருக்கும் காரின் டயர் பஞ்சர் ஆகிறது.டயரை எப்படி மாத்துறது என்று பாரதி முழிக்க,கண்ணம்மா '' எனக்கு ,மாட்ட தெரியும் நானே மாட்டி தாறன் என்று டயரை மாட்டுகிறார் .என்ன இவளுக்கு எல்லா விஷயமும் தெரியுதுன்னு பாரதி யோசிக்கிறார்.

பின்னர் கார் சரியானதும்,போய்க்கொண்டிருக்கும் வழியில் பள்ளி பிள்ளைகள் மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள் .இதைக்கண்டு பாரதி பிள்ளைகளை காரில் ஏத்திக்கொண்டு எல்லாருமே என்ஜோய் பண்ணிட்டே  செல்கிறார்கள்.இறுதியில் பிள்ளைகளை இறக்கி விட்டு அவர்களுக்கு பாரதி சாக்லேட் ஊட்டி விட்டுட்டு அப்படியே கண்ணமாக்கும் ஊட்ட கையை நீட்டுகிறார்.பாரதியின்  செயலினை கண்டு கண்ணம்மா பார்த்து விட்டு பாரதியை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.ஒரு வேளை காதல் ஸ்டார்ட் பண்ணிட்டார்களோ...அது நடந்தால் சந்தோசம் தான்.

Advertisement

Advertisement