• Jul 25 2025

ஹீரோவுக்கு, ஏன்டா வாய்ப்பு கொடுத்தோம்னு கதறிய பாரதி கண்ணம்மா இயக்குநர்? அப்படி என்ன தான் செஞ்சாரு ?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் உருவாகும், ஏகப்பட்ட ஹிட் சீரியலுக்கு இயக்குநராக இருந்து பணியாற்றி வருகிறார் பிரவீன் பென்னட். இவர் தற்போது மூன்று வருடங்களுக்கு மேலாக ரசிகர் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த ”பாரதி கண்ணம்மா” சீரியலை இயக்கி வந்தார். 

இந்நிலையில் கடந்த வாரம் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து தற்போது இதன் பாகம் 2 விஜய்  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஹீரோவாக சன் டிவியின் ரோஜா சீரியலில் நடித்த சிபு சூரியன் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இந்த சீரியலில் இவரின் அறிமுகக் காட்சியை இவரது 25 வது பிறந்தநாளை ஊர் மக்கள் சார்பில் கொண்டாடுவது போன்று அமைந்திருந்தது. மேலும் அதில் இவர் மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற அடிதடி காட்சிகளும் அந்த எபிசோட்டில் காணப்பட்டது.

அந்த வகையில் இந்த காட்சிகளை ஷுட்டிங் செய்யும் போது சிபு சூரியன், வில்லன்களை அடிக்க தன் கையை ஓங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் அருகில் இருந்த இயக்குர் பிரவீன் பென்னட் மீது அவரது கை பட்டுவிட்டதாம். 

இதை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி போட்டு, ஹீரோ சிபுவை டேக் செய்துள்ளார். ”உங்களை இந்த சீரியலில் கதாநாயகனாக போட்டதுக்கு உன்னால் என்ன பரிசு எனக்கு கொடுக்க முடியுமோ கொடுத்துட்டப்பா” என்று   கேலியாக பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement