• Jul 24 2025

கண்ணம்மாவை அடிக்க ஓங்கிய சௌந்தர்யா... தடுத்து நிறுத்திய பாரதி... வீட்டை விட்டுத் துரத்தும் தாயார்... பரபரக்கும் 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுளளது என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


அதில் பாரதி கண்ணம்மாவின் தாலி கட்டுகின்றார். இதனைப் பார்த்த வெண்பாவின் தாய் ஷர்மிளா "என் பொண்ணு வாழ்க்கையை இப்படி நாசம் ஆக்கிட்டியேடா, நீ நல்லா இருப்பியா" எனப் புலம்புகின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த பாரதியின் அம்மா சௌந்தர்யா "எல்லார் முன்னாடியும் இப்படி என் மூஞ்சில கரியைப் பூசிட்டியேடா" எனக் கூறிப் பாரதியைத் திட்டுகின்றார்.


பின்னர் "என் பிள்ளையை வளைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டியேடி, உன்னை என்ன பண்ணுறன் பார்" எனக் கூறி கண்ணம்மாவை அடிக்க கை ஓங்குகின்றார். உடனே பாரதி தன் தாயின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி "கண்ணம்மா என் பொண்டாட்டி" எனக் கூறுகின்றார்.

அதற்கு சௌந்தர்யா "இந்த நிமிசத்தில் இருந்து நீ என் பையனும் இல்லை, நான் உன் அம்மாவும் இல்லடா, இவளை கூட்டிற்று வீட்டுப் பக்கம் வந்திடாதே, அப்பிடி மீறி வந்தால் என்னை உயிரோடு பார்க்க மாட்டாய்" எனக் கூறிச் செல்கின்றார். 


Advertisement

Advertisement