• Jul 26 2025

வெண்பா சொன்ன விசயத்தால் ஷாக்கடைந்த குடும்பம்-சரியான பதிலடி கொடுத்த பாரதி-விறுவிறுப்புடன் வெளியான ப்ரமோ…!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் என்பவர் இயக்கி வருகின்றார். இது பிரபல மலையாள சீரியலின் ரீமேக் ஆகும்.

இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என தெரிந்த போதிலும் அது பற்றி மேலும் கதை நகரவில்லை. பாரதிக்கு டிஎன்ஏ சோதனை நடக்கும் வேலை கூட நடக்கவில்லை. இப்படி கதைக்க சம்பந்தமான எந்த விஷயமும் இல்லாமல் வேறு வேறு விஷயங்களால் கதையை ஓட்டி வருகிறார் இயக்குநர்.

இவ்வாறு இருக்கையில் விறுவிறுப்பாக கதையை நகர்த்துவதற்கு வெண்பாவின் அம்மா தற்பொழுது மாப்பிள்ளை பார்த்து வருகின்றார். ஆனால் வெண்பா அனைத்து மாப்பிள்ளையும் ஓட வைத்து வருகின்றார்.

இந்த தருணத்தில் அவரின் அம்மா எல்லாரையும் கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றார்.அதில் என் பேபி வெண்பாவை கூப்பிட நான் விருப்பப்படுகின்றேன் என கூறி வெண்பாவை அழைத்து தனது மாப்பிள்ளையை அறிமுகம் செய்து வைக்கின்றார் சர்மிளாவான வெண்பாவின் தாய்.

இதை கேட்டவுடன் எல்லாரும் கை தட்டி சிரிக்க வெண்பா இந்த மாப்பிளளையை எனக்கு பிடிக்கலை என கூற எல்லாரும் ஷாக்கடைகின்றனர்.நான் பாரதியை தான் லவ் பண்ணுகின்றேன் என கூற பாரதி வேகமாக எழும்பி வந்து வெண்பாவை கல்யாணம் பண்ணிக்கொள்ளிற எண்ணம் ஒரு பேசன்ரேஜ் கூட இல்லை என கூற கண்ணீர்விட்டு அழுகின்றார் வெண்பா.

இதோ அந்த ப்ரமோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement