• Jul 24 2025

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டான பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சரவணன் மீனாட்சி ராஜா ராணி கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களை இயற்றியதன் மூலம் முன்னணி இயக்குநராக அறியப்பட்டவர் தான் பிரவீன் பென்னட் .

இவரது இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா. கறுப்பு நிற பெண்கள் சமூதாயத்தில் எதிர் கொள்ளும் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் தற்பொழுது தடம் மாறி சந்தேகத்தால் பிரிந்து வாழும் குடும்பம் பற்றி எடுத்துக் கூறுகின்றது.

மேலும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஓடிய இந்த சீரியலில் இருந்து பல பிரபலங்கள் விலகியதாலும் கதையில் சரியான மாற்றம் எதுவும் நிகழாத காரணத்தினாலும் சீரியல் பின் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


 இப்போது தொடர் குறித்து வேறொரு விஷயம் வந்துள்ளது.தற்போது இந்த தொடரில் சிறப்பு வேடத்தில் பவாஸ் என்ற நடிகர் என்ட்ரீ கொடுக்கிறாராம். நடிகர் அருணுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. சீரியலைப் பார்த்தால் மட்டுமே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement