• Jul 25 2025

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் டீம்- கேக் வெட்டிக் கொண்டாடிய அழகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் றிற வேறுபாட்டை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த சீரியல் தற்பொழுது குடும்பத்திற்குள் கணவன் மனைவிக்கிடையே காணப்படும் முக்கிய பிச்சினையை எடுத்துக்காட்டுவதாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் வினுஜா மற்றும் அருண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க பாரதிக்கு கண்ணம்மா மீது எந்த தப்பும் இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது.

இருப்பிணும் கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழாமல் தனியாகவே வாழ குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கிராமத்திற்கு வந்து விட்டார். அங்கு கண்ணம்மாவைத் தேடி பாரதியும் வந்துவிட்டார். ஆனால் கண்ணம்மா மனசு மாறுவதாக இல்லை.

இப்படி ஒரு நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த சீரியல் முடிந்து விடும் என்று நம்பப்படுகின்றது. இந்த நிலையில் 1000ம் எப்பிஷோட்டை எட்டியுள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement