• Jul 23 2025

பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் மிரட்டலான குத்தாட்டம் போட்ட தாமரை- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

 திருவிழாக்களில் நாடகம் நடித்து பிரபல்யமானவர் தான் நாடகக் கலைஞர் தாமரைச் செல்வி. இவர் இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.

பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்த தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் பிபி ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருடன் இவரது கணவரும் இணைந்து நடனமாடி கலக்கினார்.


தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் தாமரை அங்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். கண்ணம்மா மகளாக நடிக்கும் குழந்தையுடன் மிரட்டல் நடனம் போட்டு அசத்தியுள்ளார்.


இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தாமரை நடனத்தினை சூப்பர் என கூறி பெருமளவு பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement