• Jul 24 2025

போலீசில் புகார் அளித்த பிக் பாஸ் 6 பிரபலம்.. நடந்தது என்ன ?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ..இந்த ரீயாலிட்டி ஷோவானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இம்முறை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர்  VJ மகேஸ்வரி.

இந்த சீசன் டைட்டில் பட்டத்திற்கு அசீம், விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசீம் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் பட்டத்தை வாங்கினார்.இவரின் இந்த வெற்றி நியாயமற்றது என்று VJ மகேஸ்வரி அவரின் ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

இதனால் அசீம் ரசிகர்கள் மகேஸ்வரியை தாக்கி பேசி வந்தனர். சிலர் எல்லை மீறி அவரின் மகனையும் தவறாக பேசினார்கள். இதற்கு மகேஸ்வரி, " என்னை குறித்து எப்படி வேணாலும் பேசுங்கள் ஆனால் என் மகனை பற்றி தவறாக பேசாதீர்கள்" என்று வார்னிங் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகும் சிலர் மிக மோசமான கருத்துக்களை  பதிவிட்டதால், மகேஸ்வரி அந்த நபர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 



Advertisement

Advertisement