• Jul 26 2025

மனைவியின் பிறந்த நாளுக்கு ஆசையாய் வாழ்த்துத் தெரிவித்த பிக்பாஸ் அபிநய்- அப்போ விவாகரத்து செய்யலையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சர்ச்சைகளுக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி தமிழில் இதுவரை6 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 6 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதுண்டு 

அந்த வகையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய், பாவனி உடன் காதல் சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார்.


அந்நிகழ்ச்சியில் இருந்து அவர் எலிமினேட் ஆகி வெளியே வந்தபோது, அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபிநய்யின் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பேச்சு அடிபட்டது. பின்னர் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


இந்த நிலையில் அபிநய் தன்னுடைய மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து பதிவொன்றினை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது நீங்கள் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொண்டு வந்துள்ளீர்கள் மற்றும் எல்லா நல்ல வழிகளிலும் என்னை பாதித்துள்ளீர்கள். உங்களுடன் இந்த வாழ்க்கையை வாழ்வதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, மேலும் வாழ்க்கையில் இதைவிட சிறப்பாக எதையும் கேட்டிருக்க முடியாது. என் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் உண்மையான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் காதலுடன் அபிநய் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement