• Jul 26 2025

சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிய பிக்பாஸ் நடிகை.. சேலையிலும் இப்படி ஒரு கவர்ச்சியா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவி வத்யா. இவர் விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் உடைய இயக்குநரான வம்சி இயக்கத்தில் உருவாகி 2019-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'மஹரிஷி' என்ற படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-ஆவது சீசனிலும் போட்டியாளர்களில் ஒருவராகக் களமிறங்கினார் திவி.


அந்த சீசனின் உடைய பரபரப்பான போட்டியாளராக பேசப்பட்ட திவி பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து குவியத் தொடங்கின. அந்தவகையில் கடந்தாண்டு சிரஞ்சீவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படமான காட்ஃபாதரிலும் திவி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது தற்போது இராண்டாவது முறையாகவும் சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றார். 


இவ்வாறு தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக விளங்கி வருகின்ற திவி சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர்.


அந்த வகையில் தற்போதும் சில்க் ஸ்மிதா போல் சேலையணிந்து இடுப்பழகு தெரிய படு ஓவராக கவர்ச்சியினைக் காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement