• Jul 25 2025

நாமினேஷன் free zone இல் நுழைபவர்கள் பெயரை அறிவித்த பிக்பாஸ்... தனியாக புலம்பும் தனம்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் சொர்க்கவாசிகளாகவும், சிலர் நரகவாசிகளாகவும் உள்ளார்கள் என்று புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.

ஏனைய டாஸ்க் போலவே இதுவும் சண்டை, கோபம், அழுகை என ரொம்பவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் தனலட்சுமி நரகவாசியாக மாற்றப்படுகின்றார். அதனைத் தொடர்ந்து nomination free zone இல் நுழைபவர்கள் பெயரை பிக்பாஸ் அறிவிக்கின்றார். அந்தவகையில் மணிகண்டன், அமுதவாணன், ஜனனி, ஏடிகே ஆகியோர் அதில் இடம்பெறுகின்றனர். 


மேலும் தனலட்சுமி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து 3நாள் விளையாடினதிற்கு காரணமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன் எனக் கூறிப் புலம்புகின்றார். அத்தோடு "இங்க அவனவன் friends ஐ அவனவன் தான் உள்ளே அனுப்பப் பார்ப்பான்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement