• Jul 24 2025

ஆசையாக வரவேற்ற சிறுவர்களிடம் தனது திமிரைக் காட்டிய பிக்பாஸ் அசீம்- வைரலாகும் வீடியோ- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்லில் வின்னர் ஆனவர் தான் அசீம். இதனால் இவருக்கு 50 லட்சம் ரூபா பணமும் ஒரு சொகுசு காரும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இதில் டைட்டில் வின்னர் ஆனாலும் தற்பொழுதும் பல விமர்சனங்களில் சிக்கி வருகின்றார்.


சமீபத்தில் கூட இவர் சீமானை சந்தித்து, எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற வசனத்தை போட்டிருந்தார். இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில் தற்போது அசீம் அவர்கள் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார். 


அங்கு அவர் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் வரவேற்று போது அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் அசீமை வரவேற்பதற்காக அன்புடன் பூங்கொத்து உடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், அதை கண்டும் காணாதது போல் அசீம் நின்றிருந்தார். 

அதுமட்டுமில்லாமல் அந்த சிறுவர்களை புறக்கணித்துவிட்டு பூங்கொத்தையும் வாங்காமல் அசீம் சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இதுதான் மக்கள் நாயகன்? செய்யும் செயலா? நீங்கள் இன்னும் திருந்தவே இல்லையா? என்றெல்லாம் பயங்கரமாக திட்டி வருகின்றனர்.



Advertisement

Advertisement