• Jul 25 2025

முகத்தில் இரத்தக் கறையுடன் பிக்பாஸ் ஏடிகே... வெளியான வீடியோ... குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சேனல்களில் ஒன்றாகிய விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி வெற்றிநடை போட்ட வண்ணம் இருக்கின்றது.

21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அந்தவகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


பிக்பாஸ் சீசன் 6-இல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ADK. இலங்கையை சேர்ந்த இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கிறார். அதிலும் இந்த வாரம் இவருக்கும், அசீமிற்கும் இடையில் நடந்த சண்டையின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மேலும் இடம்பிடித்து இருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது இவர் குறித்த ஒரு வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. இதில் அவர் ரத்தம் வடிய உணவு உண்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆனால் அந்த வீடியோ ஆனது ஒரு ஷாட் பிலிம் இற்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement