• Jul 24 2025

முதன்முதலாக காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஆயிஷா.. வெட்கத்துடன் வெளிவந்த ஜோடி போட்டோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித் திரையில் நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் ஏராளம் ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சத்யா' என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. 


இந்த சீரியலில் இவர் யாருக்கும் அடங்காத ஒரு துரு துரு பெண்ணாக, நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அத்தோடு சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனிலும் 21போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இருப்பினும் இறுதிவரை அந்த நிகழ்ச்சியில் இருக்காது, குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 


மேலும் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டபோது, ஆயிஷா மட்டும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது காதலரை பற்றிக் கூறியிருந்தார் ஆயிஷா. ஆனால் அவர் யார் என்று இதுவரை அறிவிக்கவில்லை, இந்த நிலையில் தான் ஆயிஷா தற்போது Propose தினத்திற்காக ஒரு கியூட்டான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


அந்தப் புகைப்படத்தில் ஆயிஷாவிற்கு முன்பாக ஒரு ஆண் அமர்ந்திருக்கின்றா. அதில் அவரின் முகம் தெரியவில்லை.  இருப்பினும் அதில்ஆயிஷா வெட்கத்துடன் புரொபோஸ் தினமாமே என பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement