• Jul 24 2025

அந்த பெயரை சொல்லி தனலட்சுமியை அழைத்த பிக்பாஸ்- வியந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது இதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.இதனால் வீடு கலகலப்பாக மாறியுள்ளது.இது தவிர பொங்கல் தினத்திற்கான DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில், தனலட்சுமியை பிக் பாஸ் சொல்லி அழைத்த பெயர் தொடர்பான விஷயம், தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

நடப்பு பிக் பாஸ் சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, பாதியில் திடீரென வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கடுத்து தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சில கருத்துகளையும் தெரிவித்து வந்தனர்.


அப்படி இருக்கையில், இந்த சீசனில் முந்தைய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்ததற்கு மத்தியில் தனலட்சுமியும் என்ட்ரி கொடுத்துள்ளார். அனைத்து போட்டியாளர்களிடையே அவர் மிகவும் உற்சாகமாக பேசியும், ஜாலியாகவும் இருந்து வருகிறார். அதே போல, தனா பாதியில் போனது எதிர்பாராத ஒன்று என்றும் மைனா உள்ளிட்டோர் கூறி இருந்தனர்.

தற்போது தனலட்சுமியை "மக்கள் செல்வி" என பிக் பாஸ் அழைத்துள்ளார். அவர் பாதியில் வெளியேறிய சமயத்தில் தனலட்சுமியை மக்கள் செல்வி என குறிப்பிட்டு நிறைய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகவும் செய்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள தனலட்சுமியை மக்கள் செல்வி என பிக் பாஸ் அழைத்துள்ளார். இதனால் அவர் குஷியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement