• Jul 25 2025

இரண்டாகப் பிரிந்து சண்டை போடும் பிக்பாஸ் பிரபலங்கள்; ரணகளத்திலும் கிழுகிழுப்பு காட்டிய மகேஷ்வரி

ammu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஆரம்பித்து ஒவ்வொரு சீசனாக வலம் வந்துகொண்டு இருக்கும் சமயம் இது. இதில் அக்டோபர் 9ம்  தேதி பிரம்மாண்டமாக ஆரம்பித்தது சீசன் 6. இதில் அசீம், விக்ரம், ஜிபி முத்து, ஏடிகே, விஜே மகேஸ்வரி, அசல் கோளாறு, ஷிவின், ரக்ஷிதா, ஷெரீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த பிக் பாஸ் சீசன் 6ல் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை, பிக்பாஸ் டிராபி மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் பிரமுகம் விக்ரமன் கலந்து கொண்டார். 


இந்த போட்டியில் 106 நாட்கள் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் அசீம் அனைத்துப் போட்டியாளர்களிடமும் வரம்பு மீறி பேசி சண்டைக்கு இழுத்தார். அசீமின் இந்த செயலை கமல்ஹாசனே பலமுறை கண்டித்துள்ளார்.


இறுதிப்போட்டியில் விக்ரமன், அசீம், ஷிவின் மூன்று பேரும் நிற்க விக்ரமன் அல்லது ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அசீம் வெற்றி பெற்றதால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீசனை தொடக்கம் முதல் பார்த்த ரசிகர்கள் விஜய் டீவியை புறக்கணிக்க வேண்டும் என்று கொந்தளித்து இணையத்தில் படுமோசமாக விமர்சித்தனர்.


இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் இந்த சர்ச்சை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் போட்டியாளர்களில் ஒருவரான வி.ஜே மகேஸ்வரி, சக போட்டியாளர்களுக்கு தனது வீட்டில் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியில், ரக்ஷிதா, ஷிவின், விக்ரமன், ஷெரினா, ராம், ஏ.டி.கே, அசல் கோலாறு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


புகைப்படங்களை மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பார்ட்டியில் மகேஸ்வரியின் பரம எதிரியான ஆசீம் கலந்து கொள்ளவில்லை. அதே போல அசீமின் அன்பு தங்கையான  தனலட்சுமியும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, சண்டைக்கோழியாக இருந்த  மகேஸ்வரி, அசீம் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டி நேருக்கு நேர் சண்டை போட்டார். இப்போதும்  இருவரும் இணையத்தின் வழியாகவும் சண்டை போட்டு வருகின்றனர்.









Advertisement

Advertisement