• Jul 25 2025

தனலட்சுமியை கதறி அழ வைத்த பிக்பாஸ் போட்டியாளர்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அசீம் கத்தி கத்தி சண்டை போட்டதில் தனலட்சுமி டென்ஷனாகி பதிலுக்கு கத்தியதுடன் திடீரென அழுதுவிட்டார்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டே உள்ளார். இவ்வாறுஇருக்கையில்  ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் தூங்கட்டும் என்று லைட்ஸை ஆஃப் செய்துவிட்டார்கள்.

மேலும்  அந்த நேரத்தில் விவாத மேடை குறித்து அசீம், தனலட்சுமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசீம் தனலட்சுமியை அவ, இவ என்று பேச அவருக்கு கோபம் வந்தது.

மரியாதையாக பேச கத்துக்கோங்க. அத்தோடு அசீம் இருக்கும் டீமில் நான் இருக்க மாட்டேன் என்றார் தனலட்சுமி. இதையடுத்து தனலட்சுமியிடம் அசீம் கத்திப் பேச, பதிலுக்கு அவரும் கத்தினார்.

மேலும்  ஒரு கட்டத்தில் அசீமிடம் கத்திப் பேசி பலனில்லை என்பதை புரிந்து கொண்ட தனலட்சுமி அந்த அறையில் இருந்து அழுது கொண்டே வெளியே சென்றுவிட்டார்.

நானும் பொறுமையாக இருக்கிறேன். ஆனால் வார வாரம் என்னையே டார்கெட் செய்தால் எப்படி என்று ராபர்ட் மாஸ்டரிடம் கூறி அழுதார் தனலட்சுமி. எனினும் இதற்கிடையே நீ ஏன் இப்படி கத்துற என்று அசீமிடம் கேட்டார் வி.ஜே. மகேஸ்வரி.

அசீம் கத்திய கத்தில் காதே செவிடாகிவிட்டது என்கிறார்கள் பார்வையாளர்கள். அத்தோடு அசீம் திருந்துவது போன்றே தெரியவில்லை பிக் பாஸ். தயவு செய்து இந்த வாரம் பேக் பண்ணிடுங்க என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement