• Jul 26 2025

குப்புறப் படுத்துக்கிட்டு என்ன பண்ணுறீங்க ராஜா... ரொபேர்ட் மாஸ்டரை வைச்சு செய்யும் பிக்பாஸ் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி தற்போது 39நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது 16போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் எஞ்சி உள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகளையும் கொடுத்த வண்ணமே இருக்கின்றார் பிக்பாஸ். மேலும் எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இன்றைய வாரம் ஆனது ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் பிக்பாஸினால் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பிக்பாஸ் வீடு றோயல் மியூசியமாகவும் மாறி இருக்கின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடத்தை ஏற்று நடித்த வண்ணம் இருக்கின்றார்கள்.

அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இந்த டாஸ்க்கில் ராஜாவாக ரொபேர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் நடித்து வருகின்றார்கள். இதில் ரொபேர்ட் மாஸ்டர் ஒரு இடத்தில் குப்புறப் படுத்திருந்து ரச்சிதாவிற்கு எதோ கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது அந்த இடத்தில் ஜனனி, மைனா உட்பட ஒரு சிலரும் இருக்கின்றார்கள். இவ்வாறாக ரொபேர்ட் மாஸ்டர் குப்புறப் படுத்திருக்கும் அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதற்கு செந்தில், கவுண்டமணியின் டயலாக்கை வைத்து எடிட் செய்திருக்கின்றார்கள். பிக்பாஸ் ரசிகர்கள் எடிட் செய்த இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement