• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டில் தேம்பித் தேம்பி அழுத மைனா.. ஆறுதல் சொன்ன பிக்பாஸ்.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என்பதை அறிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கிறார்கள்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க் என்று...அதன் நினைவுகளாக அதன் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது பர்மோ வெளியாகி உள்ளது. 


அதில் மைனா வந்து ஒவ்வொரு பொருட்களையும் பார்வையிடுகின்றார். மேலும் "நாம எப்படி இருக்கணும் என நம்மள சுத்தி இருக்கிற நாலு பேர் டிசைட் பண்ணக் கூடாது" எனவும் கூறுகின்றார். அத்தோடு பிக்பாஸ் வீட்டில் அவரின் நினைவுகளையும் வீடியோவாக காண்பிக்கின்றார்கள். அதனைப் பார்த்ததும் மைனா கண் கலங்கி விக்கி விக்கி அழுகின்றார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் கூறுகையில் "இந்த மைனா எல்லாக் கவலைகளையும் திறந்து சுதந்திரமாக பறக்க என் வாழ்த்துக்கள்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.  


Advertisement

Advertisement