• Jul 26 2025

ஆரம்பப் பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு.. மாணவர்கள் யார்..? ஆசிரியர்கள் யார் தெரியுமா..? வெளியானது கலக்கலான ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அத்தோடு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் பிக்பாஸ் வீடானது ஆரம்பப் பள்ளியாக மாறுகின்றது. அங்கு மாணவர்கள் மழலை மொழியில் பேசி ஆசிரியர்களிடமிருந்து அனைத்து உதவியையும் பெற்றுக் கொள்ளலாம். 

அதேபோல் ஆசிரியர்கள் பாடங்கள் எடுத்து மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து விக்ரமன் ஆசிரியராக மாறி "மியா மியா பூனைக் குட்டி" என்ற பாடலை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

மாணவர்கள் அனைவரும் தப்புத் தப்பாக அந்தப் பாடலை பாடுகின்றனர். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement