• Jul 24 2025

லியோ படத்தில் விஜய்யுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் பிக்பாஸ் ஜனனி - ஆச்சரியத்தில் கோலிவுட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இதற்கிடையே லியோ படத்தில் பெரிய திரை பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் நடிக்கின்றனர். அந்தவகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட ஜனனியும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். 

அவருக்கு விஜய்யுடன் அதிக நேரம் வரக்கூடிய வகையில் கதாபாத்திரம் லியோவில் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்திருக்கிறது.பிக்பாஸ் மூலம் புகழடைந்து இப்போது லியோவில் விஜய்யுடன் பெரும்பாலும் வருவதுபோன்ற காட்சிகள் கிடைத்து அதில் நடித்து முடித்திருக்கும் ஜனனிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிகம் வருவது போன்ற காட்சிகள் ஜனனிக்கு கிடைத்திருப்பதாக வெளியான தகவலை கேட்டு கோலிவுட் ஆச்சரியப்பட்டிருக்கிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம். 

முன்னதகா, படத்தில் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறதா. அதாவது அந்தப் பாடலுக்கு 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார்களாம். அதற்காக மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நடன கலைஞர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்யவிருக்கிறார் என தெரிகிறது.


Advertisement

Advertisement