• Jul 25 2025

அடுத்தவரின் கணவரை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ஜுலி...கொதித்தெழுந்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி.

இவர் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தான் பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால் நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார். இருப்பினும் இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார் அதே போல சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது.

இந்த பிக்பாஸ் முதல் சீசனில் வீரத்தமிழச்சியாக கலந்துகொண்டு பின் கடைசியில் சந்திக்க கூடாத பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தவர் ஜுலிக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபற்றி அதை அப்படியே மாற்றினார்.

இப்போது ஜுலிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது என்று தான் கூற வேண்டும்.எனினும் தற்போது படவாய்ப்புக்காக காத்திருக்கும் ஜுலி விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவதுடன், தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் வழக்கறிஞராக நடித்து வருகின்றார்.

இதில் அடுத்தவரின் கணவர் மீது ஆசை கொண்ட ஜுலி, அவரை தட்டிப்பறிக்க பல கிரிமினல் வேலைகளை செய்து வருகின்றார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அது சீரியல் தான் வெறும் கதை தான் என்று புரிந்து கொள்ளாமல் அடுத்தவரின் கணவரை ஆட்டையை போட நினைக்கிறீயா எனக் கேட்டு திட்டி வருகின்றனர்.



Advertisement

Advertisement