• Jul 25 2025

பெண்களின் நைட்டிகளை பார்த்ததும்.. அள்ளி அணைத்துக் கொண்ட பிக்பாஸ் மணிகண்டன்.. என்ன இப்படி ஆயிட்டாரு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் மூலம் பல ரசிகர்களின் உள்ளத்தைத் தொட்ட ஒருவரே மணிகண்டன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு சில படங்களிலும் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் நடித்திருக்கின்றார்.


இவரைப் போலவே இவர் மனைவி சோபியாவும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல சோபியா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் மாம்' என்ற பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியானது சமீபத்தில் முடிவடைந்தமையை தொடர்ந்து மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து தற்போது தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பல இடங்களிற்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அந்தவகையில் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.


அந்தக் கடைக்குச் சென்றதும் அங்குள்ள கலெக்ஷன்களை பார்த்து வியந்தார் மணிகண்டன். அதுமட்டுமல்லாது லண்டனிலிருந்து வந்து ஷாப்பிங் செய்பவர்களை பார்த்தும் வியந்துள்ளார்.


பின்னர் தனது மனைவியுடன் இணைந்து புடவைகள், ஆடை, ஆபரணங்கள் என அனைத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அதேநேரத்தில் நைட்டிகளை பார்த்ததும் மணிகண்டன் ஓடிச்சென்று அவற்றை அள்ளி அணைத்துக் கொண்டுள்ளார்.


இதனைப் பார்த்த அவருடைய மனைவி மணிகண்டனை நைட்டி ரசிகன் என செமயாக கலாய்த்துள்ளார். இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலானமையை தொடர்ந்து ரசிகர்களும் மணிகண்டனை "நைட்டி ரசிகன்" எனக் கலாய்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement