• Jul 25 2025

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் மணிகண்டன்.. சிறப்பு விருந்தினராக வந்த தங்கை.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் பலரின் மனங்களை வென்ற ஒருவர் தான் மணிகண்டன். அதுமட்டுமல்லாது இவர் ஒரு நடிகரும் கூட. சிறு சிறு காதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக களமிறங்க இருக்கின்றார்.

அதாவது அறிமுக இயக்குநர்கள் ஆகிய பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் உருவாகும் முதல்  இணையத் தொடர் ஆகிய 'மை டியர் டயானா'வில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி,  ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 


மேலும் வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் என்பவர் இசையமைக்கிறார். அத்தோடு கலை இயக்கத்தை ஏழுமலையும், படத்தொகுப்பு பணிகளை இளங்கோவனும் மேற்கொண்டிருக்கின்றனர்.

ரொமான்டிக் திரில்லர் ஜானரில் பிரமாண்டமாக தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் மணிகண்டன் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பதால் டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement