• Jul 24 2025

மைனா நந்தினிக்கு ஆர்டர் போட்ட பிக்பாஸ்...ஓ இது தான்விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது ஏழாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நாட்கள் எந்தளவுக்கு நீண்டு கொண்டு போகின்றதோ அந்தளவுக்கு போட்டியாளர்களுக்கு இடையிலான சண்டையும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது கலகலப்பு, சிரிப்பு என்பற்றுக்கும் என்றைக்குமே குறைவு இருப்பதில்லை. 

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.ஏனெனில் நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும். அத்தோடு இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இதனிடையே, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில், மைனா பிக்பாஸ் வீட்டின் தலைவராக செயல்பட்டு வருகிறார். எனினும் இதனிடையே இந்த வாரம் சிறந்த பங்களிப்பு அளித்தவர்கள் மற்றும் குறைவான பங்களிப்பு அளித்தவர்கள் பெயர்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

 அதனடிப்படையில், ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் இந்த வாரம் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள். போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது பேசும் பிக்பாஸ்,"ராபர்ட், குயின்சி சிறப்பாக பங்கெடுத்துக்கொள்ளவில்லை என தேர்வானதால் நீங்க இரண்டு பேரும் சிறைக்கு போகணும்" என்கிறார்.

இதனைத் தொடர்ந்து வீட்டின் தலைவரான மைனாவிடம் பேசிய பிக்பாஸ்,"உடைகளும் சாவியும் வந்த பிறகு அவங்க ரெண்டு பேரையும் சிறையில வச்சு பூட்டுங்க" என்று சொல்கிறார்.



Advertisement

Advertisement