• Jul 26 2025

வெளிநாட்டுக்கு மனைவியுடன் ஜாலி ட்ரிப் போன பிக்பாஸ் ராஜு- வாஃவ் செம ஹான்சம் லுக்கில் ஜொலிக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி தற்பொழுது சின்னத்திரை நாயகனாக வளர்ந்து நிற்கும் பிரபலம் தான் ராஜு ஜெயமோகன். இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல் சிறந்ததொரு அடையாளத்தைக் கொடுத்தது.


இது தவிர தனது அழகிய கண்களினால் ரசிகர்களை வசப்படுத்தும் இவர் பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு தனது காமெடி நிறைந்த பேச்சுக்களால் ரசிகர்களைக் கவர்ந்ததோடு டைட்டில் வின்னர் ஆனார்.


இதனை அடுத்து பிக்பாஸ் ஜோடிகள் ,ராஜு வூட்ல பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார். இதில் ராஜு வூட்டி பார்ட்ரி நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு பிக்பாஸ் சீசன் 6 இன் ப்ரமோஷன் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.


இவ்வாறு சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் இவர் எப்போது வெள்ளித்திரையில் கால் பதிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது மனைவியுடன்  ஸ்காட்லாந்திற்குச் சென்றுள்ளார்.


இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.





Advertisement

Advertisement