• Jul 24 2025

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அவர் தான் அடிச்சு சொல்லுறேன்- தொகுப்பாளினி ப்ரியங்கா கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.தற்போது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த சீசனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இதில் முக்கிய போட்டியாளராக கலந்த கொண்டிருப்பவர் தான் விக்ரமன். விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.


 தற்போது  பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் தொகுப்பாளனி பிரியங்கா  பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் குறித்து கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் பிரியங்கா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்தும், டைட்டில் வின்னர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு பிரியங்கா கூறியிருப்பது, இந்த சீசனில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆகுவார் என்று தோன்றுகிறது.


அவர் எல்லா விஷயத்திலுமே தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதனால் அவர் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement