• Jul 25 2025

பாலாஜியின் பிறந்தநாள் பார்ட்டியில் அம்மாவுடன் பிக்பாஸ் ஷிவானி... இந்த டுவிஸ்ட நாம எதிர்பார்க்கலயே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.


இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் யாரிடமும் பேசாமல் அமைதியாக, ரொம்ப நல்ல பிள்ளையாக இருந்த ஷிவானி, நாட்கள் செல்ல செல்ல பாலாஜியின் பின்னால் சுற்றினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் கிசுகிசுவில் சிக்கினர்.


மேலும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த ஷிவானியின் அம்மா, இந்த வீட்டுக்கு எதுக்கு வந்த, பாலா பின்னாடி சுத்தவந்தியா? என பொது நிகழ்ச்சி என்று கூட பார்க்காமல் ஷிவானியை கடுமையாக அங்கு வைத்துத் திட்டினார். அதன் பிறகு உடனே பாலாஜி தான் ஷிவானியைக் காதலிக்கவில்லை என்று கூறினார். 


இருப்பினும் பிக்பாஸ் நிகழ்சி முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் பல நிகழ்ச்சியில் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய தினம் பாலாஜியின் பிறந்தநாள் பார்ட்டியில் ஷிவானி தனது அம்மாவுடன் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்த போட்டோவை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "Happy Birthdayyy bala, Wish u all success man" எனக் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அடடா கதை அப்படி போகுதா என கேட்டு தமது வாழ்த்துக்களையும் பாலாஜிக்கு தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement