• Jul 25 2025

பிக்பாஸ் விக்ரமன் 15 பெண்களை காதலித்து ஏமாற்றி விட்டார்- ஆதாரத்துடன் பெண் ஒருவர் அளித்த புகார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் விக்ரமன். அரசியல் பிரபலம் என்ற அடையாளத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தான் வெற்றியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அசீம் வெற்றி பெற்றதோடு இவர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.இந்நிலையில் தற்போது கிருபா முனுசாமி என்று பெண் விக்ரமன் மீது பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். தன்னை காதலித்து விக்ரமன் ஏமாற்றிவிட்டதாக இருவரும் வாட்சப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.


விக்ரமன் தன்னுடன் காதலில் இருந்த நேரத்தில் தனது மேனேஜர் என கூறிக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தாராம். அதை அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார். 1.5 வருடமாக இப்படி ஏமாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு 15 பேரை விக்ரமன் இப்படி காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருக்கிறார்.

"அவரை பற்றி கட்சியில் புகார் அளித்தேன், இது பற்றி விசாரணை நடந்த குழு அமைத்தார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக்கொண்டிருக்கிறது." கட்சியின் தலைவர் மீது கூட விக்ரமன் மரியாதையுடன் பேசியது இல்லையாம். தலைவர் பற்றி மோசமாக விக்ரமன் தாக்கி பேசி இருக்கும் வாட்சப் உரையாடல்களையும் கிருபா முனுசாமி வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Advertisement

Advertisement