• Jul 26 2025

அமீரின் காதலி பாவனியுடன் ரொமான்ஸ் பண்ணிய பிக்பாஸ் விக்ரமன்- அடடே இது எப்போ நடந்திச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 அனது கடந்த மாதம் 9ம் திகதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.இதில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் கடந்த வாரம் மகேஷ்வரி வெளியேறியிருந்தார்.


இதனால் அடுத்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்றுள்ளவர் தான் விக்ரமன்.இவர் விஜய் டிவியில் 2016 ஆம் ஆண்டில் ஒளிபரப்பாகிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' எனும் சீரியலில் நடித்தார். 


இந்த சீரியலின் சில காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு  ஒளிபரப்பான இந்த தொடர் சில எபிசோட்களாக ஒளிபரப்பாகியது.இதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பான EMI தவணை முறை வாழ்க்கை எனும் தொடரிலும் விக்ரமன் நடித்துள்ளார். 


இந்த சீரியலின் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இதில்தான் முந்தைய பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான பாவனி ரெட்டி நடித்துள்ளார் என்பதும், அவருடன் விக்ரமன் நடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement