• Jul 24 2025

காதலித்து ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன்...முக்கிய நபருக்கு பறந்த கடிதம்..இப்படியெல்லாம் நடந்துச்சா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் அறம் வெல்லும் என்று பேசிய விக்ரமன் வெளியில் அடுத்தடுத்து புகார்களில் சிக்கித் தவிக்கின்றார்.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடி முடிந்தது தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் விக்ரமன்.இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருபவர்.


பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று விளையாடிய விக்ரமன் நாட்கள் போக போக டைட்டில் வின்னர் ஆகும் அளவிற்கு போட்டியிட்டிருந்தார்.அத்தோடு பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாகவும் இருப்பார். அதுமட்டுமல்லாமல் அறம் வெல்லும் என்று சொல்லி அசீமுடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.

எல்லாவற்றையும் கடந்து விக்ரமனை பின்னுக்குத்தள்ளி வெற்றியைப் பெற்றுக்கொண்டார் அசீம்.  இவ்வாறுஇருக்கையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் கிருபா முனுசாமி என்பவர் பிக்பாஸ் விக்ரமன் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடித்தத்தில், உங்கள் கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக இருந்து வரும் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலம் என்னுடன் நட்பாய இருந்துவந்தார். லண்டனுக்கு சென்றப்பின் என்னை காதலிப்பதாக தெரிவித்தார்.


அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பு இருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன்.அத்தோடு நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னை பலமுறை ஆபாச வார்த்தைகளாலும் விக்ரமன் அவமானப்படுத்தியிருக்கிறார்.அத்தோடு ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார்.

அதையும் மீறி அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.80,000 ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற” என்று கீழ்த்தரமாக பேசினார்.

எனினும் அதுமட்டுமல்லாது நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து அவருடைய தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று குற்றம்சாட்டினார்.என குறித்த கடிதத்தில் இன்னும் எழுதியிருக்கிறார். 



Advertisement

Advertisement