• Jul 24 2025

பிக்பாஸ் வைல்டு கார்டு; 'உறுதியான இறுதிப் பட்டியல் இதோ..'அந்த ஐவரும் இவர்கள் தான்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ல் வைல்டு கார்டு என்ட்ரியாக சென்றுள்ள போட்டியாளர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்தியை சினி சமூகம் தளத்திலும் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.


அந்த வகையில், சீரியல் நடிகை அர்ச்சனா, பாடகர் கானா பாலா, ஆர்.ஜே பிராவோ என மூன்று போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இதுதவிர பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லவிருக்கிறார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. சமீபத்தில் ஜல்லிக்கட்டு களம் ஒன்றில் நின்று இவர் வர்ணனை செய்தது பலருக்கும் நினைவிருக்கும். அத்துடன் இவரது பேச்சில் நகைச்சுவை தூக்கலாக இருக்குமென்கிறார்கள்

மேலும், நடிகரும் ரச்சிதாவின் கணவருமான தினேஷ் வைல்டு கார்டு என்ட்ரிக் கொடுக்கவுள்ளார். கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டினுள் செல்ல விரும்பி அது நடக்காததால் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, துடிப்பான ஐவரை பிக்பாஸ் வீட்டிற்குள் இறக்கியுள்ளார் ஆண்டவர். இவர்கள் 5 பேரில் யார் பைனலிஸ்ட் ஆக வாய்ப்பிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement