• Jul 24 2025

டுவிட்டரில் Blue Tick பறிக்கப்பட்ட விவகாரம்- மனம் திறந்து உண்மையை கூறிய த்ரிஷா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க கடந்த வருடம் வெளியான ஒரு படம் பொன்னியின் செல்வன்.

முதல் பாகம் செம ஹிட்டடிக்க இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸிற்கு சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் படு சூடாக புரொமோஷன் செய்து வருகிறார்கள்.

அத்தோடு நடிகர்களும் டுவிட்டரில் படத்தில் இடம்பெறும் தங்களது கதாபாத்திரத்தின் பெயர்களை மாற்றி புரொமோட் செய்து வருகிறார்கள்.

அப்படி இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் த்ரிஷா தனது டுவிட்டரில் பெரைய குந்தவை என்றும் ஜெயம் ரவி அருண் மொழி வர்மன் எனவும் தங்களது பெயர்களை டுவிட்டரில் மாற்றிக் கொண்டனர்.

அத்தோடு அவர்கள் பெயரை மாற்றியதும் டுவிட்டரில் அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டது.

இதுகுறித்து புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா, ஜெயம் ரவி பேசும்போது, படத்தின் புரமோஷனுக்காக தான் பெயரை மாற்றியதாகவும், விருப்பப்பட்டு பெயரை மாற்றி ப்ளூடிக்கை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement