• Jul 24 2025

பாலிவூட் நடிகையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்- மும்பை ஏர்போட்டில் ரசிகர்களுடன் செய்த ரகளை- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.அதற்கு முன்பே இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருந்த போதிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்த படமாக ரஜினி முருகன் திரைப்படம் அமைந்தது.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றார் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் பெரிதும் பிரபலமாக பேசப்பட்டது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.


அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். தற்சமயம் தெலுங்கு சினிமாக்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகிறார். தமிழில் இறுதியாக வெளியாகிய மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது மும்பை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கே ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடனபுகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement