• Jul 24 2025

ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... மாஸ்டர் பிளான் போட்ட நெல்சன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. எனினும் இதனையடுத்து டாக்டர் படம் முலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சனுடன் இணைந்தார் ரஜினி.

அத்தோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.



ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயக், யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, புஷ்பா பட வில்லன் சுனில் ஆகியோரும் நடிப்பதாக ஜெயிலர் படக்குழு அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது. 



அத்தோடு மலையாளம், கன்னடம், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இணைந்துவிட்ட நிலையில், பாலிவுட் மட்டும் விதிவிலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால், சிவராஜ்குமார் இருவருமே ரஜினியின் நண்பர்களாக நடிப்பதாகவே சொல்ல்லப்படுகிறது. அதேபோல் அவர்கள் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறுஇருக்கை, அமிதாப்பச்சனும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்காக சில காட்சிகளில் நடிக்கலாம் என்ற செய்திகள் தீயாக பரவின. ஆனால் தற்போது அவரால் நடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இன்னொரு பிரபலத்தை தட்டித் தூக்கியுள்ளது ஜெயிலர் டீம். அதன்படி ஜாக்கி ஷெராஃப் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.


விஜய்யின் பிகில் படத்தில் ஜேகே ஷர்மா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் ஜாக்கி ஷெராஃப். ஆரண்யா காண்டம், கோச்சடையான், பிகில் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராப், தற்போது ஜெயிலர் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் சொல்லப்படுகின்றது. அதேநேரம் இதுகுறித்து இன்னும் படக்குழு அறிவிப்பு வெளியிடாத நிலையில், விரைவில் அபிஸியல் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட ஜெயிலர் படம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement