• Jul 26 2025

பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் விஜய்சேதுபதி-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர்.

மேலும் அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இருந்தது.

அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்தோடு அந்த படத்தில் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கின்றார்.

மேலும் இந்த படத்துக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கவுள்ளது.

இதற்கான ஒத்திகையில் ஸ்ரீராம் ராகவன், காத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாயுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement