• Jul 26 2025

இரண்டு திருமணமும் முறிவு.. கணவரை ஷேர் பண்ணிக்க முடியாது.. குட்டி பத்மினி!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை குட்டி பத்மினி தனது திருமண வாழ்க்கையில் எதிர்கொண்ட பல பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

பிரபல நடிகையான குட்டி பத்மினி, தனது யூடியூப் சேனலில் பல முன்னணி நடிகைகள் மற்றும் திரைத்துறை அனுபவங்கள் குறித்து பேசி வருகிறார். தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போதே ஜெமினி கணேஷனின் படங்களில் நடித்து இருக்கிறேன். எனக்கு எப்போதும், புது புது உடை அணிய,மேக்கப் போட பிடிக்கும் என்பதால் நான் ஷூட்டிங்கிற்கு ஜாலியாக போவேன். அப்போது நானும் கமலும் பண்ணாதே அட்டகாசமே இல்லை.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் என் முதல் கணவருடன் திருமண வாழ்க்கை சரியாக இல்லாததால், இரண்டாம் திருமணம் நடந்த போது, அந்த வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற பயம் அதிகமாக இருந்தது. இதனால், என் இயல்பான குணத்தை விட்டுவிட்டு அவருக்காக பலவற்றை விட்டுக்கொடுத்தேன்.

அவர் என்கூட பேசவில்லை என்றால் என்னை நானே காயப்படுத்திக் கொள்வேன், அவருக்காக கையை வெட்டிக்கொண்டேன். பல நேரம் சாகலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். மேலும் அவற்றை எல்லாம் இப்போது நினைத்து பார்க்கும் போது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது.

அத்தோடு  ஒரு பெண் கணவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார், ஆனால், கணவரை மட்டும் ஷேர் பண்ணிக்க முடியாது. எந்த ஒரு பெண்ணும் இதை ஏற்றுக்கொள்ளவேமாட்டாள். இந்த நேரத்தில் தான் நான் அவரை விட்டு விலகினேன். இப்போது குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் தான் என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு தைரியமாக இருப்பதற்கு காரணம் என்றார்.


 

Advertisement

Advertisement